×

வத்தலக்குண்டு பகுதியில் இன்று மின்தடை

வத்தலக்குண்டு, ஜன. 13: வத்தலக்குண்டு பகுதியில் இன்று (13.01.2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு பகுதியில் இன்று 13ம் தேதி திங்கள்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுளளது. வத்தலக்குண்டு உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, பழைய வத்தலக்குண்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற் பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Wattalakundu ,
× RELATED வாட்டி வதைக்கும்...