×

பொங்கல் பண்டிகைக்காக

கும்பகோணம், ஜன. 13: பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பொருட்கள் எடை குறைவாக உள்ளது என்று கரும்பு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தை பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி வீடுகளில் வர்ணம் பூசி மண் அடுப்பு கட்டி புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவர். சிறப்பு பெற்ற பொங்கல் விழாவுக்கு பிரதானமான கரும்புகளை கும்பகோணம் அடுத்த அணைக்கரை, கடிச்சம்பாடி, நீரத்தநல்லூர், சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம், திருவையாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.தற்போது விழா காலம் துவங்கவுள்ள நிலையில் கரும்புகளை வெட்டி விற்பனை செய்வதற்காக திருவையாறில் இருந்து கும்பகோணம் அடுத்த தாராசுரம் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.

பொங்கல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் மாதம் விதைத்து பின் 8 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்து சுத்தம் செய்து விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். 20 கழி கரும்பு தற்போது ரூ.350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு 10 கழி கரும்பு ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்கள் கரும்பை விரும்பி சாப்பிடுவதை தவிர்த்து சாமி கும்பிடுவதற்காக மட்டும் வாங்கி வைத்து கொள்வதால்பு விற்பனை பெருமளவு குறைந்துள்ளது என வியாபாரிகள் புலம்புகின்றனர். மேலும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் 2 அடி உயர கரும்புகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படுகிறது. இதனால் அந்த கரும்பை வாங்கி பலர் வீசி சென்று விடுகின்றனர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பை தொகுப்பில் 2 அடி உயர கரும்பும் வழங்கப்படுகிறது. இந்த கரும்புகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படுவதால் அதை எப்படி சாப்பிடுவது என்று பெரும்பாலான மக்கள் வீசி சென்று விடுகின்றனர். அதேபோல் வெல்லத்தை, வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களிடமிருந்து நேரிடையாக வாங்க வேண்டும். ஆனால் கமிஷனுக்காக சர்க்கரையை வழங்குகிறார்கள். இதேபோல் அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட தமிழக அரசு வழங்கும் அனைத்து பொங்கல் பொருட்களில் உரிய எடை இல்லாமல் குறைவாக இருக்கிறது. இதிலும் பல கோடி ரூபாய் வரை அமைச்சர்கள், தலைமை செயலாளர் முதல் தரைமட்ட அலுவலர்கள் வரை கமிஷன் செல்லுவது வேதனையான விஷயமாகும் என்றார்.

Tags : festival ,Pongal ,
× RELATED கமுதி கோயில் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்