×

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு திமுக சார்பில் தலைவர், துணை தலைவர் போட்டியின்றி தேர்வு

பட்டிவீரன்பட்டி, ஜன. 13: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கடந்த 6ம் தேதி ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழாவில் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.இதில் 17 கவுன்சிலர்களில் 13 திமுக கவுன்சிலர்களும், 3 அதிமுக கவுன்சிலர்களும், 1 சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆத்தூர்

ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நடந்தது.இதில் 6வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்ற மகேஸ்வரி மட்டும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் திமுகவைச் சேர்ந்த மகேஸ்வரி ஊராட்சி ஒன்றிய தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இதேபோல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு 1வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்ற ஹேமலதா மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் திமுகவைச் சேர்ந்த ஹேமலதா ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Athur ,panchayat union ,DMK ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...