×

காந்த புயலின் தாக்கம் 5 ஆண்டுகளில் பூமியை தாக்கும் நாசா மூத்த விஞ்ஞானி கோபால்சாமி தகவல்

கொடைக்கானல், ஜன. 13: காந்த புயலின் தாக்கம் இன்னும் 5 ஆண்டுகளில் பூமியை அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதாக நாசா மூத்த விஞ்ஞானி கோபால்சாமி கொடைக்கானலில் தெரிவித்தார். கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த நாசா மூத்த விஞ்ஞானி கோபால்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சூரியனிலிருந்து வெளிப்படும் அதிகபட்ச சக்தி காந்த புயலாக மாறி இன்னும் 5 ஆண்டுகளில் பூமியை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த காந்த புயலின் காரணமாக பூமியில் உள்ள தொலை தொடர்பு சாதனங்கள், செல்போன்கள், இவற்றை பயன்படுத்துபவர்கள், சாட்டிலைட் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த காந்த புயல் மற்றும் சூரியனுடைய சக்தியை ஆய்வு செய்வதற்காக நாசா பார்க்கர் சோலார்ப்ரோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

சூரியனுக்கு அருகில் உள்ள கரோனல் பகுதியை ஆய்வு செய்யும் விதமாக இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. 2029ம் ஆண்டு வரை இந்த விண்கலம் தனது ஆய்வை மேற்கொள்ளும். இதுவரை யாரும் இந்த அளவிற்கு சூரியனை ஆய்வு செய்வதற்கு, முயற்சி மேற்கொள்ளவில்லை.

Tags : Gopalaswamy ,NASA ,
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...