×

பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

பட்டுக்கோட்டை, ஜன. 13: பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையொட்டி திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மறைமுகத் தேர்தல் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் காலையில் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் 4வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிவேலுவும், அதிமுக சார்பில் 19வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ்நாராயணனும் போட்டியிட்டனர்.

Tags : DMK ,chairmanship ,union committee ,Pattukottai ,
× RELATED வாடிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர்...