×

தேர்தலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்

பொன்னியின்செல்வன் நடத்தினார். 19 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 13 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பழனிவேல் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் நேற்று மாலை நடந்தது. இதில் 13 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முருகானந்தம் ஒன்றியக்குழு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முருகானந்தம், 11 திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏனாதிபாலசுப்ரமணியன், அண்ணாதுரை, திமுக ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை கிழக்கு பார்த்திபன், மேற்கு ராமநாதன் மற்றும் ஏராளமான திமுகவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கும், அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு, பெரியதெரு, பெரியகடைத்தெரு, மார்க்கெட் வழியாக சென்று அண்ணா. சிலைக்கும் மாலை அணிவித்தனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியதைக் கொண்டாடும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Tags : Election Rural Development Agency ,Assistant Program Officer ,
× RELATED மேச்சேரி அருகே கூனாண்டியூர்...