×

கும்பகோணம் பகுதியில் குருத்து பூச்சி தாக்கப்பட்ட சம்பா தாளடி நெல் வயல்களில் ஆய்வு

கும்பகோணம், ஜன. 13: கும்பகோணம் பகுதியில் குருத்து பூச்சி, இலை சுருட்டுப்புழு தாக்கப்பட்ட வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கும்பகோணம் வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாபுராஜபுரம், ஏரகரம், இன்னம்பூர், திருப்புறம்பியம், குடிதாங்கி ஆகிய கிராமங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் குருத்து பூச்சி மற்றும் இலை சுருட்டுபுழு தாக்குதல் தென்படுகிறது. நெற்பயிர் நடவு செய்யப்பட்டு 50 நாட்கள் முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில் உள்ளது. தற்போது நிலவி வரும் தட்ப வெப்பநிலை காரணமாகவும் தொடர் மேகமூட்டம் காரணமாகவும் நெற்பயிர்களில்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சியானது 1009, சப் 1 ரகத்தில் 50 நாள் முதல் 60 நாள் பயிர்களில் தாக்குதல் காணப்படுகிறது.

இந்த வயல்களில் கும்பகோணம் வட்டார உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஆனந்தி மற்றும் நோயியல் துறை உதவி பேராசிரியர் திலகவதி ஆகியோர் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை பார்வையிட்டனர்.
பின்னர் பூச்சிகளின் தாக்கம் பொருளாதார சேதநிலைக்கு குறைவான நிலையில் உள்ளதால் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர மற்றும் பூச்சி நோய் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின்போது அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்கரவர்த்தி, உதவி தொழில்நுட்ப மேலாளர் இளமதி உடனிருந்தனர்.

Tags : Kumbakonam Area ,
× RELATED கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து மழை:...