×

காரீப் கொள்முதல் பருவத்திற்கு கூடுதல் நேரடி நெல்முதல் நிலையங்கள் திறப்பு

புதுக்கோட்டை, ஜன.13: காரீப் கொள்முதல் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2019-20 தொடங்கி உள்ளதால் விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன் பெறும் வகையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 7ம் தேதி மாவட்டத்தில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் அறந்தாங்கி தாலுகா வல்லவாரி, மேற்பனைக்காடு, கந்தர்வகோட்டை தாலுகா புதுப்பட்டி, கறம்பக்குடி தாலுகா முதலிப்பட்டி, குளத்தூர் தாலுகா குன்னண்டார்கோவில், கீரனூர், பொன்னமராவதி தாலுகா சடையம்பட்டி, இலுப்பூர் தாலுகா பரம்பூர் மற்றும் மணமேல்குடி தாலுகா சாய்குடி, காநாடு ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறப்பட்டன. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன் பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags : paddy stations ,procurement season ,Karib ,
× RELATED காரிப் பருவத்தில் சாகுபடி செய்த...