×

சொந்த நிலத்தில் விளைவித்த புதுநெல்லை கொண்டு பொங்கல் வைத்த மக்கள் அரசு தொகுப்புக்காக காத்திருக்கும் அவலம்

திருமயம்,ஜன.13: அரிமளம், திருமயம் பகுதியில் விவசாயம் பொய்த்துபோனதால் அப்பகுதி மக்களிடையேபொங்கல் கொண்டாட்டம் களையிழந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லாத நிலையில் விவசாயமே பிராதான தொழிலாகும். பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவரும் அப்பகுதிமக்கள் விவசாயத்தில் மிகவும் கை தேர்ந்தவர்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் திருமயம், அரிமளம் பகுதியில் விளையும் காய்கறிகள், நெல், கரும்பு, தேங்காய், பழங்கள் உள்ளிட்டவைகள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் கணிசமான வருவாயை பெற்று குடும்பத்தை நடத்தி வந்தனர். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டியதால் ஒரு விவசாயி வீட்டில் குறைந்தது 10லிருந்து 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டது.

இதனால் பாக்கெட் பால் என்பதே தெரியாத நிலை இருந்து வந்தது. அப்போது விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலான குடும்பங்கள் கூட்டு குடும்பங்களாகவே இருந்தது. இதனால் கூலி வேலைக்கு பணம் விரையமாவது குறைந்து குடும்பத்தினரே விவசாய பணிகளை பகிர்ந்து கொண்டனர். அச்சமயத்தில் பொங்கலை திருமயம், அரிமளம் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் ஒரு முக்கிய திருவிழாவாக கொண்டாடினர். இந்நிலையில் பொங்கலுக்கு வயலில் அறுவடை செய்த புதிய நெல்லை எடுத்து அதனை உரலில் இட்டு உலக்கை கொண்டு இடித்து கிடைக்கும் அரிசியை சேகரிப்பர். இதனை தொடர்ந்து வீட்டு, மாட்டு பொங்கலுக்கு தனித்தனியே பெரிய அளவிலான புதிய மண் பானை வாங்கி கைகுத்தலில் கிடைத்த அரிசியை கொண்டு பொங்கலிட்டு கடவுளுக்கு, கால்நடைகளுக்கும் படைத்த பின்னரே அந்த வருடம் விளைந்த நெல்லை விவசாயிகள் சாப்பாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கமாக கொண்டிருந்தனர்.

மேலும் தை மாதங்களில் கிராமத்தில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் வயல்கள், கிராமங்கள் பச்சை போர்வை போர்த்தியது போல் காணப்படும். இந்தநிலைகள் தற்போது முற்றிலும் மாற்றமடைந்து பருவநிலை மாற்றத்தால் திருமயம், அரிமளம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வறட்சி, விஞ்ஞான வளர்ச்சி, கூட்டு குடும்ப சிதைவு, அளவுக்கு மிஞ்சிய பணவசதி காரணமாக பாரம்பரிய பொங்கல் பண்டிகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புது பானை எடுத்து, புது நெல் கொண்டுபொங்கல் வைக்கும் விசாயிகள் கடையில் அரிசி வாங்கியும், அரசுகொடுக்கும் பொங்கல் பரிசுக்கு கையேந்தி பொங்கல் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்குபொங்கல் பண்டிகைகொண்டாடமாக இருந்தகாலம் மாறிதிண்டாடமாகஉள்ளது. என அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...