அறந்தாங்கி அருகே பழங்கால ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த முதியவர்


அறந்தாங்கி, ஜன.13: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் இருந்த ஓலைச்சுவடிகளை ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்த முதியவர் அறந்தாங்கி தாசில்தாரிடம் ஒப்படைத்தார். அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (75). இவரிடம் 17 க்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், கட்டுகள் மொத்தம் 17 கட்டுகள் தனித்தனியாக தமிழ் ஓலைச்சுவடிகள் நீண்ட காலமாக வைத்திருந்தார்.  இவருடைய முன்னோர்கள் வைத்திருந்த ஓலைச்சுவடிகளை இவரும் பாதுகாத்து வைத்திருந்தார் கூரை வீட்டில் வசித்து வந்த இவர் தற்போது இந்த ஓலைச்சுவடிகளை நாம் பாது காப்பது சிரமம் இந்த ஓலைச் சுவடியில் நிறைய விவரங்கள் இருக்கலாம் நாம் தெரிந்து கொள்வது சிரமம் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவர்கள் இந்த ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து இதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை தெரிந்து கொள்வதோடு கண்காட்சிக்கும் வைப்பார்கள் என்ற நோக்கத்தில் அறந்தாங்கி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார்.

தாசில்தார் மேற்பனைக்காடு கிராமத்திற்கு சென்று பழனிச்சாமி என்பவரிடம் அவர் நீண்ட காலமாக பாதுகாத்து வைத்திருந்த மிக மிக பழமையான 17 கட்டுகள் ஓலைச் சுவடிக் கட்டுகளை பத்திரமாக பெற்றுக்கொண்டு அறந்தாங்கி தாலுகா அலுவலகம் கொண்டுவந்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று புதுக்கோட்டை மியூசியத்தின் மூலமாக தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் எடுத்துச் சென்று அங்கு உள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்யும் ஆசிரியர் ஒருவரின் உதவியோடு இதில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று தெரிவித்தார். மிக மிக பழமையான ஓலைச்சுவடி வைத்திருந்த ஒருவரே தானே முன்வந்து அறந்தாங்கி தாசில்தாரிடம் ஒப்படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aranthangi ,government ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...