×

களையிழந்து வரும் பண்டிகை ஆண்டுக்கு ஆண்டு விற்பனை சரிவு

இது குறித்து மண்பாண்ட தொழிலாளிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையன்று முன்பெல்லாம் மண்பானை வைத்துதான் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள். மண் பானையில் சமைக்கும் பொங்கல் ருசியாக இருக்கும். தற்போது நகர்புற மக்கள் காஸ் அடுப்பிலும் மண்ணெண்ணெய் அடுப்பிலும், சில்வர் மற்றும் பித்தளை பாத்திரத்திலும் பொங்கல் வைக்கின்றனர். ஏழை மக்களும் பழமையை மறக்காதவர்களும்தான் மண் பானையில் பொங்கல் வைக்கின்றனர். முன்பெல்லாம் 3 நாட்களுக்கு புதுப்பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்தது. தற்பொது ஒருநாள் மட்டும் பொங்கல் வைக்கின்றனர். இதனால் மண்பானை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது என்றனர்.

மாட்டுப்பொங்கலை தவிர்க்கும் விவசாயிகள்
இதுபற்றி அரிமளத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
அரிமளம் பகுதியில் கூட்டு குடும்பங்கள் அதிகளவில் இருந்தது. ஒரே வீட்டிற்குள் 30 பேருக்குமேல் வசித்த குடும்பங்களும் உண்டு. 1980ம் ஆண்டுகளில் சாப்பாடு மட்டுமே இப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவையாக இருந்தது. அதனால் அனைவரும் விவசாயத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்தனர். காலபோக்கில் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக விவசாயத்திற்குள் டிராக்டர், பவர் டில்லர் போன்ற கருவிகளின் வருகை விவசாய பணிகளை இலகு வாக்கியது. இதனால் விவசாயத்திற்கு கூலி ஆட்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. எனவே புது கருவிகள் வரவால் விவசாய வேலைகள் இலகுவானதால் கூட்டுக் குடும்பங்கள் சிறுசிறு குடும்பங்களாக பிரியதொடங்கியது.

பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அரிமளம் பகுதியில் மழை அளவுகுறைய தொடங்கியது. இதனால் மூன்றுபோகம் விளைந்து அரிமளம் பகுதி விவசாய நிலங்கள் ஒருபோக விளைச்சலுக்கே தண்ணீருக்காக வானத்தை பார்த்து ஏங்கியது. மேலும், கால்நடை தீவன தட்டுபாடு காரணமாக கால்நடைகளை அடிமாட்டுவிலைக்கு விற்று விட்டனர். தற்போது மாட்டு பொங்கல் வைக்கமாடு இல்லாத காரணத்தால் பெரும்பாலான விவசாயிகள் மாட்டுப் பொங்கலை தவிர்த்து வருகின்றனர். கடந்த 15 வருடங்களில் அரிமளம் பகுதிவிவசாயிகளின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் தலைமுறைக்கு பொங்கல் என்பதே விடுமுறை நாளாக போய்விடும் என்பது ஐயமில்லை என்றனர்.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...