×

என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றகோரி பேரணி

இலுப்பூர், ஜன. 13: இலுப்பூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், இலுப்பூர் ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெறவும், என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் இந்த சட்டங்களை அமலபடுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கண்டன கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
இலுப்பூர் மதினா பள்ளியில் துவங்கிய பேரணியானது இலுப்பூர் கடை வீதியில் முடி வடைந்தது. 100க்கும் மேற்பட்டவர்கள் தேசிய கொடியுடன் குடியுரிமை சட்டத்தை திரும்பக்கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

அதை தொடர்ந்து கடைவீதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு தமுமுக மாவட்ட தலைவர் முகமது சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நிஜாம்தீன் முன்னிலை வகித்தார். தமுமுக மாநில பொது செயலாளர் ஹாஜாகனி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் அசரப்அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன், தமிழர் தேசிய முன்னணி இமயம் சரவணன், பாரி, இலுப்பூர் நகர தமுகக தலைவர் ஜஹாங்கீர், ஆம் ஆத்மி அப்துல் ஜப்பார் ஆகியோர் பேசினர்.

இலுப்பூர் திமுக நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி சபிபுல்லா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி பசீர்அகமது, ஒன்றிய அவைத்தலைவர் ஆரோக்கியசாமி, நகர திமுக தொமுச தலைவர் சேட்முகமது உள்பட திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய வாழ்வுரிமை கட்சி உள்பட பல்வேறு கட்சிககளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ராஜ்முகமது வரவேற்றார். தமுமுக மாவட்ட துணை செயலாளர் சேக்தாவுது நன்றி கூறினார்.

Tags : NRC ,legislature ,NPR ,
× RELATED அரியானா முதலமைச்சர் கட்டர் ராஜினாமா:...