×

பெரம்பலூரில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

பெரம்பலூர், ஜன.13: பெரம்பலூரில் பொங்கல் பண்டிகை விற்பனை களைகட்டத் தொடங்கியது. மதில்போல் குவிக்கப் பட்டுள்ள மஞ்சள்கொத்துக்கள். மாடு களுக்கு சலங்கைகள், மூக்கனாங் கயிறு, வண்ணக் கோலமாவு, வண்ணம் பூசிய பொங்கல் பானைகள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. பொருட்கள் வாங்க பொதுமக்கள் திக்கு முக்காடுகின்றனர். தமிழர்களின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முதன்மையாக பாண்டிகை பொங்கல் பண்டிகைத் திகழ்கிறது. பயிர்களைக் காத்திடும் கதிரவனுக்கும், கழனிகளை உழுதுபயிரிட உழவர்களுக்கு ஒப்பற்றத் தோழனாக விளங்கும் காளைகளுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட ஒட்டுமொத்தத் தமிழர்களும் தயாராகி வருகி ன்றனர்.

இதனையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும்மை யமாகவும், தலைநகராகவும், விற்பனைக் கேந்திர மாகவும் விளங்கும் பெரம்ப லூர் தற்போது தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து குவிவதால் திக்குமு க்காடி திண்டாடி வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் பழையபஸ்டாண்டு காந்தி சிலை ரவுண்டானா முதல் கனரா வங்கிவரை பொங் கல் பொருள் விநியோகம் களைகட்டத் தொடங்கியுள் ளது. மதில்போல் குவிக்கப் பட்டுள்ள மஞ்சள்கொத்துக் கள் ஜோடி ரூ50க்கு விற்கப் படுகிறது. மாடுகளுக்கு மூக்கனாங் கயிறு, தாம்புக் கயிறு, திருஷ்டிக் கயிறு, கழுத்து மணிகள், சலங்கை கள் விற்பனை அதிகரித்து ள்ளது. மேலும் வாசல்க ளை அலங்கரித்து வண் ணக் கோலங்கள் போடவும், மாடுகளுக்கு வண்ணம் தீட்டவும் வண்ணப் பொடி கள் வரிசைகட்டி விற்கப் பட்டு வருகின்றன.

அதோடு பொங்கல் பானை கள் வண்ணம் தீட்டி விற்கப் பட்டு வருகின்றன. மேலும் புத்தாடைகள் வாங்க பெரி ய கடைவீதி, போஸ்ட்ஆபீஸ் தெரு ஆகியவற்றில் போக் குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக மக்கள் கூட்டம் கட் டுக்கடங்காமல் அலைமோ தி வருகிறது. செங்கரும்பு, வாழைத்தார்கள், தேங்காய் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தின மும் பெரம்பலூர் நகருக்கு சுற்றுவட்டார கிராமங்க ளில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் வந்து குவி வதால் பெரம்பலூர் நகரம் திக்குமுக்காடிப் போகிறது.

Tags : Perambalur ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...