திக்குமுக்காடும் பொதுமக்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஊராட்சிக்கு துணை தலைவர் தேர்தல் ரத்து வடக்குமாதேவியில் கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடியால் தாமதம்

பெரம்பலூர், ஜன. 13: பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் 2 ஊராட்சி மன்றத் திற்கான துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாதேவி ஊராட்சியில் உறுப்பினர்கள் திடீர் போர்க்கொடியால் தாமதமாகிப் பின்னர் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 121ஊராட்சிகள் உள்ளது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம்தேதி பதவியேற்றனர். துணைத் தலைவர் பதவிக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தான் போட்டியிடவேண்டும். இவரை தேர்ந்தெடுக்க தலைவர் மற்றும் கிராம ஊ ராட்சி வார்டு உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந் தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊரா ட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் காலை 118 ஊராட்சியிலும் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தாமதமின்றித் தடையின்றி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் ஊராட்சிமன்ற துணை த்தலைவர்களாக பதவியே ற்றனர்.

பெரம்பலூர் ஒன்றியம், வடக்குமா தேவி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர். ஆனால் ஓட்டு போடமாட்டோம். கைத்தூக்கும் முறையில்தான் துணைத் தலைவரைத் தேர் ந்தெடுத்து வெற்றி பெற் றவராக அறிவிக்க வேண் டும் என, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கூறி வாக்குவாதம் ஏற்பட்டதால், காலையில் தேர்தல் நடை பெறவில்லை. பின்னர் சமரசம்பேசி மாலையில் மீண்டும் தேர்தல் நடத்த ப்பட்டு, ஓட்டெடுப்பு மூலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

வேப்பூர் ஒன்றியம், அந்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத தால் தேர்தல் நடைபெற வில்லை. இதேபோல் ஆலத்தூர் ஒன்றியம் கொளப்பாடி ஊராட்சியில் தேர்தல் நடத்து வதற்கேற்ற வார்டு உறுப்பினர்கள் வரு கை பெரும்பான்மை இன் மையால் தேர்தல் நடை பெறவில்லை. இதனால் இந்த இரண்டு ஊராட்சி களிலும் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் ஆணையம் அறி விக்கும் தேதியில் மற்றொ ரு தேதியில் தேர்தல் நடை பெறும் என பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சித் தேர் தல் பிரிவு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: