×

பதவியேற்றதும் முதல் பணியாக ஊரெங்கும் சிசிடிவி கேமரா அமைத்த ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

ஜெயங்கொண்டம், ஜன. 13: ஜெயங்கொண்டம் அருகே பதவியேற்ற முதல் பணியாக ஊரெங்கும் சிசிடிவி கேமரா அமைத்த கூவத்தூர் ஊராட்சி தலைவரை ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் பாராட்டினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக டேவிட் தேர்வு செய்யப்பட்டார். இவர் பதவியேற்றதும் முதல் பணியாக தனது கிராமத்தில் குற்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கூவத்தூர் முழுவதும் முக்கியமான இடங்களில் 24 சிசிடிவி கேமராக்கள் அமைத்துள்ளார்.

ஆண்டிமடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெகதீசன் என்பவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சிசிடிவி அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதைதொடர்ந்து கூவத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட், தனது முதல் பணியாக 24 சிசிடிவி கேமராக்களை பொருத்துவதாக ஒப்பு கொண்டு அதை செய்து முடித்துள்ளார்.

இதற்கு ஒத்துழைப்பு தந்த பொதுமக்களுக்கும், கேமராக்கள் அமைத்து கொடுத்த ஊராட்சி தலைவரையும் பாராட்டி ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வாழ்த்து கூறினார். ஆண்டிமடம் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப்படும். இதுபோல் மற்ற கிராமங்களிலும் ஊராட்சி தலைவர்கள் முன்வந்து கேமராக்கள் அமைக்க வேண்டும். குற்றங்களை தடுக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கூறினார்.

Tags : panchayat leader ,
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...