×

புதிய குடியுரிமை மசோதாவை திரும்பபெறக்கோரி இஸ்லாமிய அமைப்பினர் பேரணி, ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.13: மயிலாடுதுறை கிளியனூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிளியனூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு செய்து தேசிய கொடி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். அப்துல்காதிர் வாஹித் தலைமையில் கிளியனூரில் அகரவல்லம் பகுதியில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக சென்று பெரிய பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று இருந்ததை மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். மவுலவி மன்சூர் காசிமி சிறப்புரையாற்றினார். பேரணியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : organizations ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!