×

இஜிஎஸ்பிள்ளை கல்வி நிறுவனங்களின் சார்பில் நாகையில் அறிவியல் கண்காட்சி.

நாகை, ஜன.13: நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி நிறுவனங்களின் சார்பாக நாளைய விஞ்ஞானி என்ற தலைப்பில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் அனைத்து பள்ளிகளின் சார்பாக 500 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கீழ்வேளூர் பிரைம் கல்லூரி தாளாளர் கோவிந்தராஜ் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளை நடத்தி, மாணவர்களுக்கிடையிலான அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொடுத்த தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செவாலியர் பரமேஸ்வரன் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி சந்திரசேகர் ஆகியோருக்கு நன்றி கூறினார். கண்காட்சி சிறப்புற நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த இயக்குநர் விஜயசுந்தரம், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாசம், கோவிந்தசாமி, மற்றும் சங்கர் கணேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்களைக் கூறினார். அறிவியல் கண்காட்சியில் சிறந்த 13 படைப்புகளை தேர்ந்தெடுத்து அதில் மூன்று படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000மும், 2வது பரிசாக ரூ.3,000ம், 3வது பரிசாக ரூ.2,000ம் வழங்கப்பட்டது.

ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ஒருவருக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற மாணவன் அறிவியல் நுணுக்கங்களைக் கொண்டு புகையில்லா வண்டியை உருவாக்கியதற்காகவும், இரண்டாவது பரிசு மாணவன் வேகமாக இயங்கும் எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியதற்கும், மூன்றாவதாக செல்பேசி மூலமாக வீட்டை பாதுகாக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து பரிசுகளையும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காவல்துறை துணைத்தலைவர் தஞ்சாவூர் சரகம் லோகநாதன் ஐபிஎஸ், திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.

Tags : Science Exhibition ,Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா