×

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்க அைழப்பு

நாகை, ஜன.13: குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய 31 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராக பணிபுரிய 31 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட 100 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஏற்கனவே அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்த அனுபவமுள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் வரையும், முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.25 ஆயிரம்- மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு மற்றும் குவைத் நாட்டில் வேலையளிப்போரால் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச்சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 42 ஆலந்தூர் சாலை, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.

Tags : Kuwait ,
× RELATED குவைத்தில் சிக்கியுள்ள தமிழக...