×

381 பேர் ஆப்சென்ட் கரூர்-திண்டுக்கல் சாலை மையப்பகுதியில் ஹைமாஸ் விளக்குகள் அமைப்பதற்காக சென்டர்மீடியன் மாற்றும் பணி மும்முரம்

கரூர், ஜன. 13: கரூர் திண்டுக்கல் சாலையின் மையப்பகுதியில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணிக்காக சென்டர்மீடியன் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் நகராட்சி பகுதியை சுற்றிலும் உள்ள முக்கிய சாலைப்பகுதிகளில் சென்டர்மீடியன்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரூர் திண்டுக்கல் சாலை சுங்ககேட் பகுதியில் இருந்து வெங்ககல்பட்டி பகுதிவரை சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகம் வரை சாலையோரத்தில் மின்விளக்குகள் உள்ளன. ஆனால், வெங்ககல்பட்டி வரை இந்த பகுதி முழுதும் இருட்டுமயமாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்லும் நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட தூரம் வரை, சாலையை விரிவாக்கம் செய்து, ஹைமாஸ் விளக்குகள் பொருத்தும் வகையில் பொக்லைன் மூலம் தடுப்புச் சுவர்கள் சற்று தள்ளி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பணிகள் முடிவடைந்த பிறகு விளக்குகள் வைக்கும் பணியும், சாலை விரிவாக்கமும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : center ,road center center ,Dindigul ,Karur ,Hymas ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்