×

கரூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் பயனற்று கிடக்கும் குப்பை தொட்டிகள்

கரூர், ஜன. 13: ஊராட்சி பகுதிகளில் பயனற்ற நிலையில் கிடக்கும் குப்பை தொட்டிகளை நகராட்சி பகுதியில் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் குப்பை மேலாண்மை திட்டத்துக்காக குப்பை தொட்டிகள் வரவழைக்கப்பட்டு கிராம பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. பகுதி மக்கள் அதில் குப்பைகளை கொட்டியபிறகு, பின்னர் அவை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் கிராம பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் காலை நேரங்களில் வீடு வீடாக பணியாளர்கள் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதில், குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. பணியாளர்கள் குப்பை சேகரிக்க செல்லும் சமயங்களில் வீடுகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் இல்லாத நிலையில், குப்பைகள் தெருவோரம் கொட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில், தெருக்கள் இணையும் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட சில பஞ்சாயத்து அலுவலக பகுதிகளில் பயனற்ற நிலையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பயனற்ற நிலையில் உள்ள குப்பை தொட்டிகளை முறையான அனுமதி பெற்று நகராட்சி பகுதிகளில் வைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : panchayat areas ,Karur district ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்