×

தாந்தோணிமலை வடக்குதெருவில்

கரூர், ஜன. 13: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வடக்குத்தெருவில் சாக்கடை கழிவுகள் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் பல்வேறு சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலுக்கு செல்லும் வடக்குத்தெரு சாலை உள்ளது. இந்த தெருவில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.வடக்குத்தெரு பகுதியில் அனைத்து கழிவுகளும் சாக்கடை வடிகால் வழியாக கோயில் எதிரே உள்ள பிரதான சாக்கடையில் கலக்கும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், குறிப்பிட்ட தூரம் மேடான பகுதியாக சாக்கடை வடிகால் உள்ளதால், வடக்குத்தெருவை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியோரம் கழிவுகள் சீராக செல்லாமல் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், கொசுக்கள் உற்பத்தி, துர்நாற்றம் போன்ற பல்வேறு தொந்தரவுகளை பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனை சரி செய்ய வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், சாக்கடை கழிவுகள் தேங்கி, அருகில் உள்ள குடிநீர் குழாய்களிலும் பரவி, தண்ணீருடன் கழிவுகளும் சேர்ந்து வரும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடை பெறுவதாகவும் பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு சாக்கடை கழிவுகள் சீராக செல்லும் வகையிலான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thanthonimalai North Theru ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...