×

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: 1603 பேர் பங்கேற்பு

திருப்பூர்,ஜன.13:  திருப்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் 1603 பேர் தேர்வெழுதினார்கள்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் நேற்று தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் ஒரு பிரிவினராகவும், மற்றவர்கள் பொதுப்பிரிவினராகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகம் முழுவதும் பொதுப்பிரிவினருக்கான எழுத்து நேற்று தேர்வு நடைபெற்றது. அதில் திருப்பூரில் குமரன் மகளிர் கல்லூரி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் பொதுப்பிரிவில் 2,197 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். தகுதி பெற்றவர்களில்  குமரன் மகளிர் கல்லூரியில்  849 பேர், இடுவம்பாளையம் பள்ளியில் 754 பேர் என மொத்தமாக 1603 பேர் தேர்வெழுதினர். 594 பேர் தேர்வெழுத வரவில்லை.காவல் துறையில் பணிபுரிவோருக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.  மாவட்டம் முழுவதுமிருந்து 415 பேர் பங்கேற்கவுள்ளதாக மாநகர், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Tags : Writing Examination for Police Sub-Inspector ,Participants ,
× RELATED காவிரி நீர் முறைப்படுத்தும் குழு...