×

திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர், ஜன.13: திருமூர்த்தி அணையிலிருந்து, உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்தவிடக்ககோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து  5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் ஒரு அங்கமாக உப்பாறு அணை கட்டப்பட்டது. 572 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையிலிருந்து வலது, இடது கரை பாசன கால்வாய் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள, 6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரம்பிக்குளம்-ஆழியாறு  இரு மண்டலமாக இருந்த போது முறையாக உப்பாறு அணைக்கு திண்ணீர் திறக்கப்பட்டது. உப்பாறு பாசன விவசாயிகள் மூன்று போக சாகுபடி செய்து செல்வ செழிப்பில் திளைத்தனர்.

பி.ஏ.பி., பாசன பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டதால் கடந்த  1994 முதல் கசிவு நீர்வரத்து குறைந்து, வறண்டு காணப்படுகிறது. இதனால், சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட நீர் கிடைக்காமல், விவசாயிகள் கடுமையாக பாதித்க்கப்பட்டு வருகின்றனர்.பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி, உபரி நீர் வீணாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வறண்டு காணப்படும் உப்பாறு அணைக்கு நீர் வழங்க வேண்டுமென விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் ஆகியோர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதானக்கால்வாய் அரசூர் ெஷட்டர் வழியாக, கடந்த, 9ம் தேதி முதல் 13 ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அரசூர் ெஷட்டரிலிருந்து, உப்பாறு அணை, 46 கி.மீ., உள்ளது. இந்த நீர் வழித்தடத்தில், சிறியது, பெரியது என, 17 தடுப்பணைகள் உள்ளன.திருமூர்த்தி அணையிலிருந்து தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால், வழியோரத்திலுள்ள, அனைத்து தடுப்பணைகளும் நிரம்பியுள்ளன. மேலும், ஓடையிலுள்ள, சிறிய அளவிலான குட்டைகள், ஊராட்சி தடுப்பணைகளும் நிரம்பியுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் சிறிது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Opening ,Thirumurthi Dam ,Upparu Dam ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு