×

மஞ்சூரில் கரடி நடமாட்டம் பொதுமக்கள் பீதி

மஞ்சூர், ஜன.13:மஞ்சூர் அரசு மருத்துவமனை அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்னர்.மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து  வருகிறது. சமீபத்தில் முள்ளிமலை பகுதியில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட  கரடி ஒன்றை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பின் தொலைதூரமுள்ள  பங்கிதபால் பகுதிக்கு கொண்டு சென்று கரடி விடபட்டது. இதை தொடர்ந்து சில தினங்கள் கரடியின் நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் கரடி உலா வரத்துவங்கியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் மஞ்சூர் ஐயப்பன் கோயில் மதில்சுவர் ஏறி கோயில்  வளாகத்திற்குள் குதித்த கரடி அங்கிருந்த விளக்குகளை கீழே தள்ளி தீபம் ஏற்ற  வைத்திருந்த எண்ணையை குடித்து சென்றுள்ளது. இதேபோல் இரவு 8 மணியளவில்  அருகில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய சாலையில் கரடி சாவகாசமாக  நடந்து சென்றது. இதை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து சத்தம்  போட்டனர்.  கரடி பழைய வனச்சரகர் அலுவலகம் வழியாக தேயிலை தோட்டத்திற்குள்  இறங்கி சென்றது. மஞ்சூர் பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள்  இடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Tags : panic ,Manjore ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!