×

மழையில் இடிந்த பள்ளி சுற்று சுவர்

மஞ்சூர், ஜன.13:மழையில் இடிந்த அரசு மகளிர் பள்ளியின் சுற்றுசுவர் கட்டித்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மஞ்சூரில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6முதல் 10ம் வகுப்பு வரை  உள்ள இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட  மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை சுற்றிலும் அடர்ந்த காடு உள்ளதால்  வனவிலங்குகள் நுழையாமல் இருக்க சுற்றுசுவர் கட்டப்பட்டது. கடந்த மூன்று  மாதங்களுக்கு முன்பு மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கன மழை பெய்தது.இந்த  மழையில் மஞ்சூர் சுற்றிலும் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன்  மகளிர் பள்ளியின் சுற்றுசுவர் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இடிந்து விழுந்த சுற்றுசுவர் கட்டிடத்தை  சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அருகில் உள்ள வனப்பகுதிகளில்  இருந்து பாம்புகள் மற்றும் காட்டுமாடுகள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள்  பள்ளி வளாகத்திற்குள் நுழைகின்றன. பகல் நேரங்களிலேயே காட்டுபன்றிகள்  படையெடுப்பதால் மாணவிகள், ஆசிரியைகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.  இதையடுத்து மழையில் இடிந்து விழுந்த சுற்றுசுவர் கட்டிடத்தை சீரமைக்க  வேண்டும் என பெற்றோர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : school ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி