×

விளம்பரச்செய்தி... கோவை சிட்டி செயின்ட் பால்ஸ் மகளிர் கல்லூரிக்கு தரச்சான்று

கோவை, ஜன.13: கோவை தடாகம் சாலை கே.என். ஜி புதுாரில் அமைந்துள்ள செயின்ட் பால்ஸ் மகளிர் கலை அறிவியில் கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது ஆண்டறிக்கையின்படி 9 பாடப்பிரிவுகளில் மிகச் சிறப்பான தரச் சான்று பெற்றுள்ளது. பி.காம் பாடப்பிரிவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 122 கல்லுாரிகளில் செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக் கல்லுாரி முதல் இடத்தை பெற்றுள்ளது. பி.பி.எம். சி.ஏ பாடப்பிரிவில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ள 3 கல்லூரிகளில் செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக் கல்லூரியும் ஒன்று.

பி.சி.ஏ பாடப்பிரிவில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ள 4 கல்லூரிகளில் ஒன்றாகவும், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சைன்ஸ் பாடப்பிரிவில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ள 6 கல்லூரிகளில் ஒன்றாகவும், பி.எஸ்.சி ஐ.டி பாடப்பிரிவில் 100சதவீதம் வெற்றி பெற்றுள்ள 6 கல்லூரிகளில் ஒன்றாகவும், எம்.காம் பாடப்பிரிவில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ள 11 கல்லுாரிகளில் ஒன்றாகவும், பி.எஸ்.சி மெக்ஸ் பாடப்பிரிவில் 122 கல்லூரிகளில் செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக்கல்லூரி 9-ம் இடத்தையும், பி.காம் சி.ஏ பாடப்பிரிவில் 11ம் இடத்தையும், பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவில் 19ம் இடத்தையும் பெற்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் மிகச் சிறப்பான தரச்சான்று பெற்று செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக்கல்லுாரி சாதனை
படைத்துள்ளது. கல்வி வளர்ச்சிக்காக உழைத்த செயின்ட் பால்ஸ் மகளிர் கலைக்கல்லூரி முதல்வரையும், துணைப் பேராசிரியர்களையும், ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி மாணவிகளையும், பெற்றோர்களையும் கல்லூரி நிர்வாகம் சார்பில் செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவர் டேவிட் பாராட்டினார்.

Tags : Coimbatore ,St. Paul's Women's College ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு