×

எஸ்ஐ எழுத்து தேர்வில் 3833 பேர் பங்கேற்பு

கோவை, ஜன.13:கோவையில் நடந்த எஸ்ஐ பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வில் 3833 பேர் பங்கேற்றனர். 1653 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணியிடத்திற்கு பொது பிரிவினருக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று காலை நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.கோவை மாவட்டத்தை பொறுத்த வரை பிஎஸ்ஜி, ஜிஆர்டி, எஸ்என்ஆர், என்ஜிபி ஆகிய  நான்கு கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இத்தேர்வு நடந்தது.  காலை 10 மணிக்கு துவங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவு  பெற்றது.

கோவை மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த மொத்தம் 5486 பேரில் 3833 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1653 பேர் தேர்விற்கு வரவில்லை. மொத்தம் 749 பெண்களில் 495 பெண்கள் தேர்வு எழுதினர். 254 பெண்கள் தேர்வு எழுத வரவில்லை. 4737 ஆண்களில் 1399  பேர்  தேர்வு எழுதவில்லை. கோவையில் எழுத்து தேர்வு நடந்த 4 மையங்களையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், கோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த  தேர்வையொட்டி மையத்தில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : participants ,SI ,
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ