×

திருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்

காரைக்கால், ஜன. 13:  தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் திருநள்ளாறு சனிபகவான்  கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு உள்ள புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் ஆலயம்,  காரைக்கால் அம்மையார்  கோயில், தருமபுரம் தேனாமிர்தவல்லி உடனுறை யாழ்முறிநாதர் தேவஸ்தானம் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். மேலும் திருநள்ளாறு ஆதீன மடத்திற்கு சென்றார். காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்த அவரை அமைச்சர் கமலக்கண்ணன், மும்மத தலைவர்கள், கோயில் அறங்காவலர்கள்  வரவேற்றனர். திருநள்ளாற்றில் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த் ராஜா, கோயில் நிர்வாக அதிகாரி சுபாஷ், கட்டளை விசாரணை சுந்தசாமி தம்பிரான் சுவாமிகள் வரவேற்றனர்.

Tags : Thirunallar Temple ,
× RELATED திருநள்ளாறு கோயிலில் எம்எல்ஏ ஆதரவாளருக்கு ‘பளார்’