×

குண்டும், குழியுமாக காணப்படும் மந்தாரக்குப்பம் பேருந்து நிலைய சாலையை சீரமைக்க வேண்டும்

நெய்வேலி, ஜன. 13: நெய்வேலி அடுத்துள்ள மந்தாரக்குப்பம் சாலை, கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் முக்கிய சாலையாகும். இங்கு கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு பேருந்துகள் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் வந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்கிறது.  இவ்வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் அருகே இருப்பதால் தினமும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் என்எல்சி தொழிலாளர்கள் பணிக்கு செல்கின்றனர்.

இச்சாலை பல வருடங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இவ்வழியாக சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள வணிக வளாகங்கள், வார சந்தை, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு மக்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர். எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,bus stand ,Mantarakuppam ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை