கஞ்சா விற்ற 2 பேர் கைது

புவனகிரி, ஜன. 13: பரங்கிப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீத்தாம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அவையாம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (32) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோல் பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் மற்றொரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரங்கிப்பேட்டை மாதா கோயில் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன்(41) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவரிடம் சுமார் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற 2பேர் கைது