×

திருச்செந்தூர் ஒன்றிய தலைவராக செல்வி வடமலைபாண்டியன் தேர்வு

திருச்செந்தூர், ஜன.13: திருச்செந்தூர் ஒன்றியக்குழு தலைவராக செல்விவடமலைபாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்செந்தூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 5 வார்டுகளில் 4வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. புதிய உறுப்பினர்கள் 6ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். நேற்று முன்தினம் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 4வது வார்டு உறுப்பினர் செல்வி வடமலைப்பாண்டியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக 3வது வார்டு உறுப்பினர் ரெஜிபர்ட் பர்னாந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து ஒன்றிய தலைவர், துணைத்தலைவருக்கு முன்னாள் அதிமுக தொகுதி செயலாளர் வடமலைப்பாண்டியன், ஒன்றியசெயலாளர் ராமச்சந்திரன், நகரசெயலாளர் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கானம் செந்தமிழ்சேகர், சுரேஷ்பாபு, மாவட்ட அவைத்தலைவர் அமலிராஜன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கணேசன், முன்னாள் தொகுதி துணை செயலாளர் ராஜாநேரு, நாலுமாவடி விஜயகுமார், காயல்பட்டணம் பெருநகர செயலாளர் செய்யதுகாசிம், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர்கள் அடைக்கலாபுரம் வழக்கறிஞர் ஜேசுராஜ், காயல்பட்டணம் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், வீட்டு வசதி சங்க தலைவர் சுந்தர், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வினோத், சண்முகசுந்தரம், செண்பகராஜ், வார்டு செயலாளர்கள் மகாலிங்கம், சந்தனராஜ், கார்த்திகேயன், அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Thiruchendur ,Vadamalaipandian ,Union ,President ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...