×

விளாத்திகுளத்தில் ரத்ததான முகாம்

விளாத்திகுளம்,ஜன.13: விளாத்திகுளத்தில் உள்ள தமிழ் கேட்டரிங் மற்றும் பாராமெடிக்கல் கல்வி நிறுவனத்தில் ரத்ததான முகாம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தமிழ் கல்வி நிறுவனத்தின் தலைவர் அழகுமணிகண்டன் தலைமை வகித்தார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனை மருத்துவர் பேபிபொன்அருணா முன்னிலை வகித்து ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்ததானம் வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு விளக்கவுரை வழங்கப்பட்டது.இந்த முகாமில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான குழு தலைவர் மருத்துவர் தேவசேனா, ஆலோசகர் சேவியர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பிக்கை மைய ஆலோசகர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன், கார்த்திக், கோவில்பட்டி ரத்ததான குழுவைச் சேர்ந்த செவிலியர்கள் ஜானகி, ராஜேஸ்வரி, பயிற்சி செவிலியர்கள் காயத்ரி, கவிதா, காவ்யா, பானுபிரியா, ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் ராம்பிரசாத் செய்திருந்தார்.

Tags : Blood camp ,Vladikulam ,
× RELATED விளாத்திகுளம் அருகே விபத்தில் 2 பேர்...