×

விருதுநகர், வெம்பக்கோட்டை யூனியனில் அதிமுகவினர் தலைவர்களாக தேர்வு

விருதுநகர், ஜன. 12: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்கு 9 இடங்களும், மதிமுகவிற்கு ஒரு இடம் என திமுக கூட்டணிக்கு 10 இடங்களும், அதிமுகவிற்கு 14 இடங்களும், ஒரு சுயேட்சை வெற்றி பெற்றனர். இதில் அதிமுகவில் வெற்றி பெற்ற தமிழ்செல்வன் திமுகவில் இணைந்ததால் திமுக கூட்டணிக்கு 11 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களும் இருந்தன.நேற்று தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்காக இரு தரப்பினரும் பாதுகாப்பாக வேன்களில் அழைத்து வரப்பட்டனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் அதிமுகவின் சுமதி ராஜசேகர் 15 ஓட்டுகளும், திமுக சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி 10 ஓட்டுகளும் பெற்றனர்.

அதிக ஓட்டுகள் பெற்ற அதிமுகவின் சுமதி ராஜசேகர் ஒன்றிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.  மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவின் முத்துலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் அதிமுகவினரே வெற்றி பெற்றனர். நேற்று ஒன்றியத் தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நடந்தது. 1வது வார்டு அதிமுக கவுன்சிலர் பஞ்சவர்ணம் ஒன்றியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Virudhunagar ,leaders ,Vembakkottai Union ,AIADMK ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...