×

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுகவினர்

சிவகாசி, ஜன. 12:  விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி, விருதுநகர் ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவராக வசந்திமான்ராஜ், துணைத்தலைவராக சுபாஷினி, விருதுநகர் யூனியன் சேர்மனாக சுமதி ராஜசேகர், துணைத்தலைவராக முத்துலட்சுமி வெம்பக்கோட்டை யூனியன் தலைவராக பஞ்சவர்ணம் கணேசன், துணைத்தலைவராக ராமராஜ்பாண்டியன் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அனைவரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நேற்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

இதே போன்று தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியின்போது சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், ராமராஜ்பாண்டியன், விருதுநகர் ஒன்றியச் செயலாளர் தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...