×

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது திமுக

மானாமதுரை, ஜன.12: மானாமதுரையில் நடந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றதால் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றியது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஒன்றியக்கவுன்சில் பதவிகளுக்கான தேர்தலில் திமுக 7 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும், சிபிஐ ஒன்றிலும், அமமுக ஒன்றிலும் வெற்றிபெற்றன. சிபிஐ திமுக கூட்டணியில் இருந்த போதிலும் அமமுக ஒன்றியக்கவுன்சிலர் திமுகவுக்கு வாக்களித்தார். இதனால் தலைவர் தேர்தலில் திமுக ஒன்பது இடங்களை பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது.

6 வது வார்டு கவுன்சிலரான லதா ஒன்றியக்குழு தலைவராக தேர்தல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றார். இவர் திமுக மேற்கு ஒன்றியசெயலாளர் அண்ணாத்துரை மனைவியாவார். மாலை 4 மணிக்கு மேல் நடந்த துணைத்தலைவர் தேர்தலிலும் திமுக ஒன்றியக்கவுன்சிலர் முத்துச்சாமி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : DMK ,Vice President ,Manamadurai Panchayat Union ,President ,
× RELATED திமுகவில் இணைந்த பாஜ நிர்வாகிகள்