×

உசிலம்பட்டியில் திமுக வெற்றி: அதிமுக.வினர் மேஜை சேர்களை எறிந்து ரகளை

உசிலம்பட்டி, ஜன.12: உசிலம்பட்டி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்து கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இதில் அதிமுக 5, திமுக 4, காங்கிரஸ் 1, அமமுக 2, சுயேட்சை 1. நேற்று தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக சார்பில் ரஞ்சனி சுதந்திரமும், அதிமுக சார்பில் பாண்டியம்மாள் உக்கிரபாண்டியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர். திமுக 7 கவுன்சிலர்களையும், அதிமுக, சுயேட்சை கூட்டணியுடன் 6 கவுன்சிலர்களை தங்கள் கைவசம் வைத்திருந்தனர். திமுக கூட்டணி மெஜாரிட்டியாக இருந்ததால், அதிமுக வினர்கள் வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதில் 13வது வார்டு அல்லிகுண்டம் கவுன்சிலர் வீரம்மாள், ஆர்.டி.ஓ.கொடுத்த வேட்பாளர் மனுவை கிழித்தெரிந்து சக அதிமுகவினர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் திமுக.விற்கு 7 கவுன்சிலர்களும் வாக்களித்து விட்டனர். அப்போதும் அங்கு வந்து வாக்குவாதத்தில் அதிமுக ஈடுபட்டனர். பின்னர் திமுக வேட்பாளர் ரஞ்சனி சுதந்திரம் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்தனர். துணை தலைவராக அமமுக பாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : DMK ,victory ,Usilampatti ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...