×

மண்ணச்சநல்லூர் யூனியன் சேர்மனாக திமுக தர் போட்டியின்றி தேர்வு

மண்ணச்சநல்லூர், ஜன.12: மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் திமுக கவுன்சிலர் தர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாக நேற்று போட்டியின்றி பொறுப்பேற்றார்.
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 23 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதன் மூலம் சேர்மன் பதவி திமுக வசமானது. நேற்று மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் சேர்மன் மற்றும் துணை சேர்மனுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் அதிமுக எம்எல்ஏ கணவரை தோற்கடித்த தர் போட்டியின்றி ஒருமனதாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். துணை சேர்மனாக திமுக கவுன்சிலர் செந்தில்(எ)கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். சேர்மன் மற்றும் துணை சேர்மனாக பொறுப்பேற்றவர்களுக்கு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : DMK Outer ,Mannachanallur Union Chairman ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு