×

கட்சியினர் உற்சாக கொண்டாட்டம் தா.பேட்டை அருகே மாவலிப்பட்டி ஊராட்சி மன்ற து.தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தா.பேட்டை, ஜன.12: தா.பேட்டை அருகே மாவலிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 25 ஊராட்சிகளில் நேற்று ஊராட்சி துணை தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மாவிலிபட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் ஊராட்சியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் போட்டியிடுவதாக கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுவாமிநாதன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அங்கு சென்று உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எவ்வித முடிவும் எட்டவில்லை. இதையடுத்து ஊராட்சி உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தை பதிவு செய்த அலுவலர்கள் மாவலிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் மாவலிப்பட்டி ஊராட்சியை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றுள்ளது.
தொட்டியம்: தொட்டியம் ஒன்றியம் அப்பணநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் தலைவருக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொட்டியம் அடுத்த அப்பணநல்லூர் ஊராட்சியில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில் வாக்களிக்க வார்டு உறுப்பினர்கள் போதிய அளவு வராத காரணத்தால் துணைத் தலைவர் தேர்தலை நிறுத்தி வைத்தனர். இதர ஊராட்சிகளில் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்வு நடைபெற்றது.

Tags : Mavalipatti ,panchayat councilor ,election ,Thapet ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்