×

முத்துப்பேட்டை அருகே ஊராட்சிஒன்றிய பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

முத்துப்பேட்டை, ஜன.12: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா தலைமையாசிரியை கலாராணி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். அதனை தொடர்ந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு பள்ளியில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பின்னர் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Equality Pongal Festival ,Muthupetty ,Panchayat Unity School ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா