×

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் தலைவர் பதவியை திமுக கூட்டணி 5, அதிமுக 5 இடங்களை பிடித்தன

திருவாரூர், ஜன.12: திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியினை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 ஓன்றியங்களிலும், அதிமுக 5 ஒன்றியங்களிலும் பிடித்தன.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் ஒன்றிய குழுதலைவராக திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் தேவா, துணை தலைவராக பொருளாளர் துரை தியாகராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் கொரடாச்சேரி ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த உமாபிரியா பாலசந்திரன், துணை தலைவராக ஒன்றிய செயலாளர் பாலசந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் தலைவராக திமுகவைச் சேர்ந்த சோமசெந்தமிழ்ச்செல்வனும், துணை தலைவர் பதவிக்கு ஞானசேகரனும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், துணை தலைவராக திமுக மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதேபோல் கோட்டூர் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ஒன்றிய குழு தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணிமேகலை, துணை தலைவராக திமுகவை சேர்ந்த விமலாரவிசந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிமுக: இதேபோல் குடவாசல் ஒன்றிய குழு தலைவர் தலைவராக அதிமுகவை சேர்ந்த கிளாராசெந்தில் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தென்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நன்னிலம் ஒன்றிய குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் தலைவராக அதிமுக-வை சேர்ந்த விஜயலட்சுமிகுணசேகரன் மற்றும் துணை தலைவராக அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வலங்கைமான் ஒன்றிய குழுதேர்தலில் தலைவராக அதிமுகவை சேர்ந்த சங்கர் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த வாசு என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மன்னார்குடி ஒன்றியக்குழு தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சேரன்குளம் மனோகரன் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வனிதாஅருள்ராஜன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தேர்தலில் தலைவராக அதிமுகவை சேர்ந்த கனியமுதா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கஸ்தூரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியினை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 5 ஓன்றியங்களிலும், அதிமுக 5 ஒன்றியங்களிலும் என இரு கட்சிகளும் சம அளவில் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags : coalition ,DMK ,district ,AIADMK ,Thiruvarur ,
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...