புதுக்கோட்டை மாவட்டத்தில் 325 இடங்களில் போட்டியின்றி ஊராட்சி துணை தலைவர்கள் தேர்வு

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் 325 இடங்களில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 325 இடங்களில் போட்டியின்றி துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட 155 ஊராட்சிகளில் 8 ஊராட்சிகளில் குலுக்கல் முறையில் துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், இடையப்பட்டி, துடையூர், ராமசாமிபுரம், இரும்பாநாடு, முதுகுளம், குளந்திரான்பட்டு, திருமணஞ்சேரி, கரு.தெற்குதெரு, வத்தனாக்கோட்டை, சாத்தியடி, சேதுராப்பட்டி, புலிவலம், விளாப்பட்டி மற்றும் லெட்சுமணப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் நடத்தும் அளவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், கூடலூர், மேலமேல்நிலை, செம்பூதி ஆகிய ஊராட்சிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Tags : Pudukkottai district ,Panchayat ,Deputy Chairman ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...