×

பொன்னமராவதி ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

பொன்னமராவதி, ஜன.12: பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரூபாய் ஆயிரத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. கண்டியாநத்தம், ஆலவயல் ரேசன் கடையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி பயனாளிகளுக்கு பச்சரிசி, பொங்கல் பொருட்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கினார் ஆலவயல் கூட்டுறவு சங்கத் தலைவர் பழனிச்சாமி, ஊராட்சித் தலைவர்கள் செல்வி, சந்திரா, விஏஓ.விஜயா, கூட்டுறவு சங்க துணை தலைவர் நிசார் அலி, இயக்குனர்கள், அழகு, சிட்டாள் சுப்பிரமணியம் , காந்திமதி , பழனிச்சாமி செல்வி மீனாட்சி, கலைச்செல்வி உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் திருக்களம்பூரில் கூட்டுறவு சங்கத் தலைவர் ராசமாணிக்கம், ஊராட்சித் தலைவர் ராமாயிமணி, ஒன்றியக் கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் பொங்கல் பொருட்கள் வழங்கினார். மரவாமதுரையில் கூட்டுறவு சங்கத்தலைவர் பழனியப்பன், ஊராட்சித் தலைவர் பழனியாண்டி, ஒன்றியக் கவுன்சிலர் பழனியாண்டி ஆகியோர் வழங்கினர். இதேபோல இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.

Tags : gift packing ceremony ,Ponnamaravati Union ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத...