7 பேர் மீது வழக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 9: இடங்களை திமுக கைப்பற்றியது

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஒன்றியக்குழு தலைவர் பதவிைய தி.மு.க. கைப்பற்றியது. மீதமுள்ள 4 ஒன்றியக்குழுத்தலைவர் பதவிைய அ.தி.மு.க. கைப்பற்றியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழுத் தலைவருக்கு காலையில் மறைமுக தேர்தலும், துணை தலைவருக்கு மாலையில் மறைமுக தேர்தலும் நடைபெற்றது.
புதுக்கோட்டை:  15 உறுப்பினர்களை கொண்ட புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சின்னையாவும், தி.மு.க. சார்பில் வெள்ளையம்மாளும் போட்டியிட்டனர். இதில் சின்னையா 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெள்ளையம்மாள் 6 வாக்குகள் பெற்றார். ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றி பெற்ற சின்னையா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று பின்னர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த மாதவன் வெற்றி பெற்றார்.
திருவரங்குளம் ஒன்றியம் (25): திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த வள்ளியம்மை தங்கமணி (19 வாக்குகள்) ஒன்றியக்குழு தலைவராகவும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்தி (19 வாக்குகள்) பெற்று துணை தலைவராகவும் வெற்றி பெற்றனர்.
அரிமளம் ஒன்றியம்: 13 ஒன்றியக்குழு உறுப்பினர்களைக் கொண்ட அரிமளம் ஒன்றியத்தில் திமுக சார்பில் மேகலா முத்து ஒன்றியக்குழு தலைவராகவும், துணைத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கடையக்குடி திலகரும் வெற்றி பெற்றனர்.
மணமேல்குடி ஒன்றியம்: 15 ஒன்றியக்குழு உறுப்பினரை கொண்ட மணமேல்குடி ஒன்றியத்தில் தி.மு.க.வை சேர்ந்த பரணிகார்த்திகேயன் போட்டியின்றி வெற்றி பெற்றார். துணை தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த முகமது அப்துல்லா வெற்றி பெற்றார்.
அறந்தாங்கி: 26 ஒன்றியக்குழு உறுப்பினரை கொண்ட அறந்தாங்கி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மகேஸ்வரி சண்முகநாதன், துணை தலைவராக திமுக வை சேர்ந்த ஜெயசுதா கணேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆவுடையார்கோவில்(15): ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த உமாதேவி, துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியா குப்புராஜா வெற்றிபெற்றனர்.
திருமயம் (15):  திருமயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு போட்டியின்றி வெற்றிபெற்றார். துணை தலைவராக மீனாட்சி சிவக்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பொன்னமராவதி (16): பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுதா அடைக்கலமணி, துணை தலைவராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனலெட்சுமி அழகப்பன் வெற்றிபெற்றனர்.
விராலிமலை (21):  விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க. சார்பில் காமு மணியும், துணை தலைவராக திமுகவை சேர்ந்த லதா இளங்குமரன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
குன்னண்டார்கோவில் (14): குன்னண்டார்கோவில் ஒன்றியக்குழு தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட பாண்டிச்செல்வி வெற்றிபெற்றார். துணை தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சித்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கந்தர்வகோட்டை(14):
கந்தர்வகோட்டை ஒன்றியக்குழு தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் (எ) ரத்தினவேல் வெற்றிபெற்றார். துணை தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செந்தாமரை வெற்றி பெற்றார்.
கறம்பக்குடி ஒன்றியம் (16):  கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாலா ராஜந்திரதுரை வெற்றிபெற்றார். ஒன்றியக்குழு துணை தலைவர் தேர்தலில் அ.ம.மு.கவை சேர்ந்த பரிமளம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அன்னவாசல் ஒன்றியம் (20): அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயலெட்சுமியும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமசாமியும் தலா 9 வாக்குகள் பெற்றதால் குலுக்கல்முறையில் தேர்வு செய்யப்பட்ட ராமசாமி ஒன்றியக்குழு தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கு காங்கிரஸ் உறுப்பினர் ஜெயம்தங்கவேலு வாக்களிக்க வந்தபோது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அவர் வாக்களிக்கவில்லை. ஒன்றியக்குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மணமேல்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், அரிமளம், பொன்னமராவதி, விராலிமலை, குன்னண்டார்கோவில், கறம்பக்குடி, திருவரங்குளம் ஆகிய 9 ஒன்றியக்குழுத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. மீதமுள்ள புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வகோட்டை, அன்னவாசல் ஆகிய 4 ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதேபோல மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

Tags : DMK ,Pudukkottai district ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம்...