புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவருக்கான தேர்தல்

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டஊராட்சிகுழு தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 6ம் தேதி பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர்கள் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயலெட்சுமி 22 வாக்குகளில் 12 வாக்குகளை பெற்று மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கலைவாணி 10 வாக்குகளை பெற்றார்.
பின்னர் மாலையில் மாவட்ட ஊராட்சிக்குழுத் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் உமா மகேஸ்வரியும், தி.மு.க. சார்பில் கலைவாணியும் போட்டியிட்டனர். இதில் உமா மகேஸ்வரி, கலைவாணி ஆகிய 2 பேரும் 11 வாக்குகளை பெற்றனர். இதைத்தொடர்ந்து குலுக்கல் முறையில் துணை தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி, கலைவாணி ஆகியோர் பெயரை சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். இதில் உமா மகேஸ்வரி வெற்றி பெற்று, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணை தலைவர் ஆனார். மாவட்ட ஊராட்சிக்குழுத் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ள உமாமகேஸ்வரி காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் தங்கவேலுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது தெரியவந்து உள்ளது.

Tags : Election ,Deputy Chairman ,Pudukkottai District ,Panchayat Union ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...