×

ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: பாமக வெற்றி துணைத்தலைவர்் பதவி திமுக கைப்பற்றியது

ஜெயங்கொண்டம், ஜன.12: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பாமக மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பாமக மாவட்ட செயலாளர் ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுகவும், ஒரு காங்கிரசும் சுயேட்டை இரண்டு இடங்களிலும், அதிமுக 3இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக த்தில் நடைபெற்றது. முன்னதாக தலைவருக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது இதில் 4வது வார்டு உறுப்பினர் பாமக மாவட்ட செயலாளர் ரவி சங்கர் மற்றும் 12வது வார்டு உறுப்பினர் திமுக சார்பில் அருள்தாஸ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர் பின்னர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் ரவிசங்கருக்கு 10 வாக்குகளும், திமுக வேட்பாளர் அருள்தாஸ்க்கு 9 வாக்குகளும் கிடைத்தன. தேர்தல் நடத்தும் அலுவலர் பாமக வேட்பாளர் ரவிசங்கர் வெற்றி பெற்றதாக அறிவித்தார். ரவி வெற்றி பெற்றதையடுத்து ஆணையர்கள் அலுவலர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மாலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இதில் எட்டாவது வார்டு உறுப்பினர் லதா கண்ணன் மற்றும் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் துணைத் தலைவர் போட்டிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். துணைத் தலைவர் தேர்தலில் திமுக 10 வாக்குகளும் அதிமுக கூட்டணி 9 வாக்குகள் பெற்றனர். துணைத்தலைவராக திமுக வேட்பாளர் லதா கண்ணன் அறிவிக்கப்பட்டார்.

Tags : DMK ,union committee election ,Jayankondam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி