×

அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி அதிமுக போட்டியின்றி தேர்வு

அரியலூர்,ஜன.12: அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நேரடித் தேர்தலைத் தொடர்ந்து 2ம் நிலையாக, 1 மாவட்ட ஊராட்சித் தலைவர், 1 மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 6 ஒன்றியங்களில் 6 ஒன்றியக்குழுத்தலைவர், 6 ஒன்றியக்குழு துணைத் தலைவர், 201 ஊராட்சிகளில் 201 ஊராட்சிமன்ற துணைத் தலைவர்கள் என மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் 215 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் தலைவருக்கு காலை 11மணிக்கும், துணைத் தலைவருக்கு மதியம் 3.30 மணிக்கும் நடைபெற்றது.இதில் ஒரு மாவட்ட கவுன்சில் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரும், துணைத்தலைவராக பாமகவை சேர்ந்த அசோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வியும், தேமுதிகவை சேர்ந்த சரஸ்வதி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருமானூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த சுமதி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த கலைமதி 10 வாக்குகள் பெற்றுள்ளார். துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வன் அதிமுக சார்பில் அம்பிகா ராஜேந்திரனும் போட்டியிட்டனர். இதில் அம்பிகா ராஜேந்திரன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் முத்தமிழ்ச் செல்வன் 10 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவின் பலம் பதினொன்றாக இருக்கும் நிலையில் திமுகவிற்கு 10 ஓட்டுகள் அதிமுகவிற்கு 11 ஓட்டுக்களும் கிடைத்து அதிமுக வெற்றி பெற்றது. மேலும் காலையில் அதிமுகவினரும், மாலையில் திமுகவினரும் சாலைமறியலில் ஈட்டனர்.

Tags : Ariyalur district ,panchayat leader ,AIADMK ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...