×

பொங்கல் பண்டிகையைெயாட்டி பெரம்பலூரில் செங்கரும்பு விற்பனை படுஜோர்

பெரம்பலூர்,ஜன.12: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூரில் செங் கரும்பு விற்பனைக்காக மலைபோல் குவிந்தது. ஜோடி ரூ100க்கும், கட்டு ரூ500க்கும் விற்பனை நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கோலாக லமாக மாநிலமெங்கும் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது தித் திக்கும் செங்கரும்புதான். செங்கரும்பு உண் பதற்கா க மட்டுமன்றி, வீடுகளை, வாகனங்களை, விற்பனை நிலையங்களை, வணிக நிறுவனங்களை தோரணங்களால் அலங்கரிக்கவும், குறிப்பாக புதிதாக திருமணமான மணப்பெண்களின் வீட்டுக்கு சீர்வரிசை செய்யும் முக்கிய பொருளாகவும் பயன்படுவதால், செங்கரும்புக்கு எப்போதும் மவுசு அதிகம் உண்டு.
பெரம்பலூர் மாவட்டத்தில் களரம்பட்டி, அம்மாபாளை யம், செட்டிக்குளம், பொம் மனப்பாடி, கோனேரிப் பாளையம்,சோமண்டாப்புதூர், மலையாளப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கரும்பு பயிரிடப்படுகிறது.
இருந்தும் பொங்கல் பண்டிகை வந்து விட்டால் திண்டுக்கல், ஒட் டன் சத்திரம், தொட்டியம், திருவளர்ச் சோலை, முசிறி, நாமக்கல், தருமபுரி உள்ளி ட்டப் பகுதிகளில் இருந்தும் செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்வதற்காக குவிக்கப் படுகிறது.
பெரம்பலூர் நகரில் பொங்கல் பண்டிகை தொடங்கும் முன்னதாக என்.எஸ்.பி ரோ டு எனப்படும் பழைய பஸ் டாண்டில் உள்ள பெரியார் சிலை முதல் காந்திசிலை வரையிலான 100 மீட்டர் சாலை, அம்பேத்கர் சிலை எதிரே, கனரா வங்கி அரு கே, சங்குப்பேட்டை, புது பஸ்டாண்டு உள்ளிட்டப் பகுதிகளில் இப்போதே செங்கரும்பு மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாகத் தொடங் கியுள்ளது. இதில் விற்ப. னை தொடங்கிய முதல் நாளிலேயே ஜோடி ரூ.100க்கும், கட்டு ரூ500க்கும் விலை வைத்து விற்கப்பட்ட து.
இவற்றை பொங்கல் சீர் செய்வதற்காகவும் கிராமப் புறங்களில் சில்லரைவியாபாரத்திற்காக பலர் வாங்கிச் சென்றனர். இன்று அதே செங்கரும்பின் விலை பொங்கல் நெருங்குவதால் சற்று அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஜோடிரூ.100, கட்டு ரூ.500க்கு விற்பனை

Tags : Coconut Sugarcane Padukor ,Perambalur ,Pongal Festival ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி