×

அதிமுக செயலாளர் திமுகவில் ஐக்கியம்

தரங்கம்பாடி ஜன.12: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அதிமுக கிளை செயலாளர் திமுகவில் இணைந்தார். செம்பனார்கோவில் அருகே உள்ள காளஹாஸ்திநாதபுரம் அபிஷேககட்டளை பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் மோகன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த காசி, தமிழ்செல்வன், பாமக முன்னாள் செயலாளர் ரமேஷ் ஆகியோர் திமுக நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது மாவட்ட துணை செயலாளா; ஞானவேலன் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன், காளஹாஸ்திநாதபுரம் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளருமான சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Tags : Unity ,AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...