×

மயிலாடுதுறையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பு

மயிலாடுதுறை , ஜன.12: மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் டாஸ்மாக் கடை திறப்பதில் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது. முதன்முதலாக ஸ்டேட்வங்கி சாலையில் ஒரு கடையை திறந்து நாள் ஒன்றுக்கு ரூ.20 லட்சம் விற்பனையானது, பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் பயனில்லை. அதையடுத்து திடீரென்று கூறைநாடு பேருந்துநிறுத்தத்தில் ஒரு புதிய டாஸ்மாக் கடையை திறந்தது. இந்நிலையில்
மயிலாடுதுறை ஸ்டேட் வங்கி சாலையிலிருந்து ஜுவல்லரி கடைகளுக்குச் செல்லும் பாதையில் பஜனமடசந்திற்கு பின்புறத்தில் புதிதாக டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. கடைக்குப் பின்புறம் ஆதிதிராவிட மாணவிகள் விடுதி உள்ளது. விடுதிக்கு முன்பாக மசூதி உள்ளது, இப்பகுதியில் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் வணிக நிறுவனங்களுக்குச் செல்வோர் பாதிக்கப்படுவர் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறையில் சாலைகள் சரியில்லை, பாதாள சாக்கடையால் நொந்துபோய் உள்ளனர், புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்கு முயற்சியில்லை, ரிங்சாலை அமைக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, ஆனால் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பதில் அரசு போர்க்கால அடிப்படையில் மும்முரமாக இருக்கிறது வேதனை தருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Opening ,Task Shop ,Mayiladuthurai ,Old Bus Stand ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...