×

தாந்தோணிமலை பகுதியில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் மெத்தன போக்கு

கரூர், ஜன.12: பருவ மழையை எதிர்பார்த்து கரூர் மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்து ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட ஆச்சிமங்களம் கிராமம் அருகம்பாளையம் குளம், தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி பின்புறம்இருந்த குளம், அவை செல்லும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.. வருவாய்த்துறை அரசாணையின்படி அரசுக்கு சொந்தமான குளங்களையும் அவைசெல்லும் நீர்வழிப்பாதைகளையும் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரவேண்டும் என தொடர்ந்து குறைதீர்கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.
தாந்தோணி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரானது மேட்டுப்பகுதியான கோடங்கிப்பட்டியில் இருந்து ஓடை வழியாக அடித்துவரப்பட்டு இந்த குளங்கள் நிரம்பும். இந்த குளத்தில் உள்ள உபரிநீரானது தாந்தோணி ராஜவாய்க்கால் வழியாக அமராவதி ஆற்றில் கலந்து விடும். இது 1950ம் ஆண்டுக்கு முன்பிருந்த வருவாய் பதிவேடுகளின் உள்ளது.
நீர்நிலை, நீர்வழிப்பாதை, பாசனவாய்க்கால்கள், ஆறு, ஏரி, குளங்களை தூ ர்வார வேண்டும் என பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே பதிவேடுகளின்படி நேரில் ஆய்வு செய்து,. ஆக்கிரமிப்பில் உள்ள குளங்களை உடனடியாக கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.
அமராவதி பாசன வாய்க்கால்களை நகர பகுதி என்பதால் சீரமைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகர பகுதியாக இருந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை தூர்வாரினால் பாசனத்திற்கு பயனின்றி போனாலும் நிலத்தடி நீர்மட்டமாவது உயரும். நீரை சேமித்து குடிநீருக்கும் பயன்படுத்தலாம் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Thanthonimalai ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...